பாராளுமன்றத்தில் வேலை

பாராளுமன்றத்தில் வேலை

 

பாராளுமன்றத்தில் வேலை
இந்திய பாராளுமன்றத்தில் எடிட்டர், புரடியுசர், ஹெட், ஆங்கர், கன்சல்டன்ட், காப்பி எடிட்டர், ரிப்போர்ட்டர் போன்ற பணியிடங் களுக்கு 43 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பதாரர்கள் 58 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்களுக்கு அதிகாரி தரத்தில் பணியிடங்கள் உள்ளன.

டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், 10-ம் வகுப்பு படித்தவர் களுக்கும் ஒருசில பணியிடங்கள் உள்ளன.

அந்தந்த பணிக்கான காலியிட விவரம், அதற்கான கல்வித்தகுதி விவரம், வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் காணலாம்.

விருப்பமுள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விவரங்களை http://rstv.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.