பள்ளி மாணவ, மாணவிகளுக்காக கன்னிமாரா பொது நூலகத்தில் கோடை

பள்ளி மாணவ, மாணவிகளுக்காக கன்னிமாரா பொது நூலகத்தில் கோடை விடுமுறை கொண்டாட்டம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்காக கன்னிமாரா பொது நூலகத்தில் கோடை

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கன்னிமாரா பொது நூலகத்தில் கோடை விடுமுறை கொண்டாட்டம் தொடங்கியது.

கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னிமாரா பொது நூலகம் மற்றும் 32 மாவட்ட மைய நூலகங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டு மென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் படி கன்னிமாரா பொது நூலகத்தில் மே 13-ம் தேதி (நேற்று) முதல் வரும் 23-ம் தேதி வரை 11 நாட்கள் தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை விடுமுறை கொண்டாட் டம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இதன்படி, நேற்று கதை சொல்லுதல், கட்டுரை பயிற்சி நடைபெற்றது. இன்று கதை சொல்லுதல், கட்டுரை பயிற்சியும், 15, 16-ம் தேதிகளில் ஓவியப் பயிற்சியும், 17,18-ம் தேதிகளில் சதுரங்கப் பயிற்சியும், 19, 20-ம் தேதிகளில் கைவினைப் பொருட்கள் செயல்முறை பயிற்சியும், 21, 22-ம் தேதிகளில் யோகாசனமும், 23-ம் தேதி பாரம்பரிய விளையாட்டுகளும் நடக்கின்றன.