பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (16.05.2018) வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (16.05.2018) வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (16.05.2018) வெளியீடு

8.66 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு | தமிழகம், புதுச்சேரியில் 8.66 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.

காலை 9.30 மணி முதல் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

பள்ளி மாணவ, மாணவிகளின் உயர் கல்வியை தீர்மானிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8,66,934 பேர் தேர்வு எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் 80 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.

இப்பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிவடைந்ததும் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அப்பணியும் நிறைவடைந்தது.

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளியிடப்படும் என்று, தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (16-ம் தேதி) வெளியிடப்படுகிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகத்தில் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சிறிது நேரத்தில் மாணவ, மாணவிகளின் செல் போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மாணவ, மாணவிகள் கீழ்க்கண்ட இணையதளங்களில் தங் கள் பதிவு எண், பிறந்த தேதி யைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in , www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றவர்களின் பட்டியல் (Rank List) வெளியிடும் முறை கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படுவதையும், தேவையில்லாமல் பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமில்லாத போட்டி உருவாவதை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.

எனவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வு ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது. 1200-க்கு 1100-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர், 1000-க்கு மேல் எடுத்தவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்களும், பாடவாரியாக 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை விவரங்களும் மட்டுமே வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து புள்ளி விவரங்களையும் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் செய்தியாளர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. | DOWNLOAD