பிளஸ்-2 தேர்ச்சியில் காஞ்சீபுரம், திருவள்ளூரை முந்திய சென்னை

பிளஸ்-2 தேர்ச்சியில் காஞ்சீபுரம், திருவள்ளூரை முந்திய சென்னை

பிளஸ்-2 தேர்ச்சியில் காஞ்சீபுரம், திருவள்ளூரை முந்திய சென்னை

பிளஸ்-2 தேர்ச்சியில் காஞ்சீபுரம், திருவள்ளூரை முந்திய சென்னை பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானது.

இதில் சென்னை மாவட்டம் 93.09 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடம் சென்னை மாவட்டம் 92.99 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.

இது கடந்த ஆண்டை விடவும் 0.1 சதவீதம் அதிகம் ஆகும். காஞ்சீபுரம் மாவட்டம் 87.21 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த வருடம் 88.85 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இது 1.64 சதவீதம் குறைவு ஆகும். திருவள்ளூர் மாவட்டம் 87.17 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த வருடம் 87.57 சதவீதம் தேர்ச்சி அடைந்திருந்தது. கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இது 0.4 சதவீதம் குறைவு ஆகும். கடந்த வருடங்களோடு ஒப்பிடுகையில் காஞ்சீபுரம், திருவள்ளூரை பிளஸ்-2 தேர்ச்சியில் சென்னை முந்தியுள்ளது.