மின்வாரிய பணிக்கு ஆகஸ்டில் தேர்வு

மின்வாரிய பணிக்கு ஆகஸ்டில் தேர்வு

மின்வாரிய பணிக்கு ஆகஸ்டில் தேர்வு

தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் பிரிவில் 300, சிவில் பிரிவில் 25 என மொத்தம் 325 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

இதற்கு, 81,000 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

முதன்முறையாக எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வாரியத்தில் காலியாக உள்ள 325 உதவி பொறியாளர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, வரும் ஜுன் மாதம் எழுத்துத் தேர்வை நடத்தித் தரும்படி அண்ணா பல்கலைக்கழகத்திடம் கோரப்பட்டது.

ஜூலை மாதம் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் உள்ளதால் ஆகஸ்ட் மாதம் தேர்வை நடத்தித் தருவ தாக தெரிவித்துள்ளது.

தேர்வுக்கான பாடத் திட்டங் கள் மின்வாரிய இணையதளத் தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு நேர்மையாக நடத்தப்பட உள்ளதால் விண்ணப்பதாரர் கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.