பிளஸ் 2 தேர்வு மதிப்பீட்டில் தொழிற்கல்வி பாடங்களுக்கும் விடைத்தாள்

பிளஸ் 2 தேர்வு மதிப்பீட்டில் தொழிற்கல்வி பாடங்களுக்கும் விடைத்தாள் எண்ணிக்கை 10 ஆக குறைப்பு

பிளஸ் 2 தேர்வு மதிப்பீட்டில் தொழிற்கல்வி பாடங்களுக்கும் விடைத்தாள்

பிளஸ் 2 தேர்வு மதிப்பீட்டில் தொழிற்கல்வி பாடங்களுக்கும் விடைத்தாள் எண்ணிக்கை 10 ஆக குறைப்பு | பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பொதுப் பாடங்களுக்கு ஒருவேளைக்கு வழங்கப்படும் விடைத்தாள்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 12-லிருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டது.

கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கும் விடைத்தாள்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால், தொழிற்கல்வி பாடங்களுக்கான விடைத்தாள் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதைத்தொடர்ந்து, தொழிற்கல்வி பாடங்களிலும் விடைத்தாள்களின் எண்ணிக்கையை 10 ஆகக் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் தொழிற்கல்வி ஆசிரியர்கள், அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவியை புதன்கிழமை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து தொழிற்கல்வி பாடங்களுக்கும் விடைத்தாள்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்பட்டது. இதற்காக அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு ஜனார்த்தனன் நன்றி தெரிவித்தார்.