சுற்றுலாத்துறையில் வேலை

சுற்றுலாத்துறையில் வேலை

சுற்றுலாத்துறையில் வேலை

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிறுவனத்தில் தோட்டக்காரர், காவலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப் படுகிறது.

மொத்தம் 23 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தோட்ட பராமரிப்பாளர் பணிக்கு 13 இடங்களும், வாட்ச்மேன் பணிக்கு 10 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 1-7-2017-ந் தேதி 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சுற்றுலா ஆணையர், சுற்றுலா ஆணையரகம், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை, சென்னை 600002 என்ற முகவரியை 28-5-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

மாதிரி விண்ணப்ப படிவம் www.tamilnadutourism.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

விரிவான விவரங்களையும் அதில் பார்க்கலாம்.