ராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் பணி

ராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் பணி

ராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் பணி

ராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் பணி : ராணுவ பாதுகாப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி கழக நிறுவனம் சுருக்கமாக டி.ஆர்.டி.ஓ. எனப்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் (ஆர்.எ.சி.) நிறுவனத்தில் தற்போது சயின்டிஸ்ட் – பி, பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 41 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 1-6-2018-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் , மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

1-6-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை rac.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.