சீர்மிகு சட்டக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி

சீர்மிகு சட்டக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு

சீர்மிகு சட்டக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி

சீர்மிகு சட்டக் கல்லூரியில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவி்த்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் 29 உதவி பேராசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள் விவரம் சட்டம் – 20; வரலாறு – 1; பொருளாதாரம் – 1; வணிக நிர்வாகம் – 1; ஆங்கிலம் – 2; அரசியல் அறிவியல் – 2; கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் – 2. மொத்த பணிக்காலம் 11 மாதங்கள்.

மாதம் ரூ.40,000 தொகுப்பூதியமாக அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண் போதும். அத்துடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிஎச்டி முடித்திருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை உரிய பரிசீலனை கட்டணத்துக்கான வரைவோலையுடன் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பக் கடைசி நாள் மே 28-ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கூறியுள்ளார்.