தமிழக பட்ஜெட் 2018-2019-ம் ஆண்டில் 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும்

தமிழக பட்ஜெட் : 2018-2019-ம் ஆண்டில் 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்

தமிழக பட்ஜெட் 2018-2019-ம் ஆண்டில் 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும்

200 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-

* 2018-2019-ம் ஆண்டில் 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். மேலும், இந்த அரசால் தற்போது கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்கு செல்லாத 33,519 குழந்தைகளை 2018-2019-ம் ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 2018-2019-ம் ஆண்டில், ரூ.200 கோடி செலவில் நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மாணவ, மாணவியருக்கு நான்கு இணை சீருடைகள், புத்தக பைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், மிதிவண்டிகள் மற்றும் பஸ் கட்டண சலுகைகளை இந்த அரசு விலையில்லாமல் தொடர்ந்து வழங்கி வருகிறது. 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக மொத்தம் ரூ.1,653.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பள்ளி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்குவதற்கு, 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பள்ளிக்கல்வித் துறைக்காக, 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.27,205.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.