சென்னை பல்கலைக்கழகம் சார்பில் தேசிய தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் தேசிய தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் தேசிய தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பல்கலைக்கழக மானியக் குழு(யு.ஜி.சி.) சார்பில் நடத்தப்படும் தேசிய தகுதி தேர்வு(நெட்) முதல் தாளுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசனை மையம் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவர்கள் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

ஜூன் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையில் உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதற்கான விண்ணப்ப வினியோகம் 21-ந் தேதி (அதாவது, நேற்று) தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.unom.ac.in -ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அந்த இணைய தளத்தை பார்வையிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.