சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வழியில் படிப்போருக்கு 26-ந்தேதி முதல் தேர்வு இணையதளத்தில் ‘ஹால்’ டிக்கெட் வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி

சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, நூலகவியல் உள்ளிட்ட படிப்புகளை தொலைதூர கல்வி வழியில் படிக்கும் மாணவ-மாணவர்களுக்கு வருகிற 26-ந்தேதி முதல் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வு வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடக்கிறது. டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூன் 4-ந்தேதி முதல் (சென்னை மையத்தில்) தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு அட்டவணை, மைய விவரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

தேர்வு எழுதும் மாணவ-மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை www.id-eu-n-om.ac.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை பல்கலைக்கழகம் (தொலைதூர கல்வி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.