மாணவர் சேர்க்கை குறைந்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது கடும்

மாணவர் சேர்க்கை குறைந்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

மாணவர் சேர்க்கை குறைந்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது கடும்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தால், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுரை அளித்துள்ளோம்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர இந்த ஆண்டு 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் 28-ம் தேதி கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.