சென்னை பல்கலை. தொலைதூர கல்வி தேர்வு மே 26-ல் தொடக்கம்

சென்னை பல்கலை. தொலைதூர கல்வி தேர்வு மே 26-ல் தொடக்கம்

சென்னை பல்கலை. தொலைதூர கல்வி தேர்வு மே 26-ல் தொடக்கம்

பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள் மே 26-ம் தேதி தொடங்குகின்றன.

இத்தேர்வுகள் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறும். அதேபோல், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் ஜுன் 4-ம் தேதி தொடங்குகின்றன.

இத்தேர்வுகள் அனைத்து நாட்களிலும் தொடர்ச்சியாக சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும்.

தேர்வு கால அட்டவணை, தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ஆகியவை தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் இராம. சீனுவாசன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.