பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டன. மாணவர்கள் உடனடியாக மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து 21-ம் தேதி பிற்பகல் முதல் ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் நேற்று அந்தந்த பள்ளியிலேயே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்களும் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அவர்கள் தற்காலிக மதிப் பெண் சான்றிதழை பயன்படுத்தி கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.

அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறையினர் தெரிவித்தனர்.