பிளஸ்-2 பொதுத்தேர்வு கணக்குபதிவியல் வினாத்தாள்பிளஸ்-2 பொதுத்தேர்வு கணக்குபதிவியல் வினாத்தாள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு கணக்குபதிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? சி.பி.எஸ்.இ. விளக்கம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு கணக்குபதிவியல் வினாத்தாள்பிளஸ்-2 பொதுத்தேர்வு கணக்குபதிவியல் வினாத்தாள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு கணக்குபதிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? சி.பி.எஸ்.இ. விளக்கம் | சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி, தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று கணக்குபதிவியல் பாடத்துக்கான தேர்வு நடந்தது. இந்நிலையில், அதிகாலையில் தேர்வுக்கு முன்பாகவே கணக்குபதிவியல் வினாத்தாள் வெளியானதாகவும், அது ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, டெல்லி துணை முதல்-மந்திரியும், கல்வி மந்திரியுமான மணிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில், “சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதாக எனக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இது தொடர்பாக விசாரணை நடத்தவும், சி.பி.எஸ்.இ. மீது வழக்குப்பதிவு செய்யவும் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார். அதே சமயம் வினாத்தாள் வெளியானதாக கூறப்படுவதை சி.பி.எஸ்.இ. திட்டவட்டமாக மறுத்தது. இதுபற்றி சி.பி.எஸ்.இ.-ன் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளிக்கையில், “வினாத்தாள் வெளியானதாக பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன. தேர்வின் புனிதத்தை கெடுக்கும் நோக்கில் சில விஷமிகள் இப்படி செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இது தொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்யவும் சி.பி.எஸ்.இ. வாரியம் முடிவு செய்து உள்ளது” என்றார்.