யுஜிசி `நெட்’ தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

யுஜிசி `நெட்’ தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி சென்னை பல்கலைக்கழகம் ஏற்பாடு

யுஜிசி `நெட்’ தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

யுஜிசி `நெட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கபல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மையம் ஏற்பாடு செய்துள் ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மைய இயக்குநர் (பொறுப்பு) எம்.சக்திவேல், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட்டு வரும் `நெட்’ தேர்வுக்கு (தாள்-1) மாணவர் ஆலோசனை மையம் சார்பில் ஆண்டுதோறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது.

ஜுன் 2 -ம் தேதி முதல்.. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இதில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகள் ஜுன் 2 முதல் 24 வரை (சனி, ஞாயிறு) நடைபெறும். இதற்கான விண்ணப்பத்தைப் பல்கலைக்கழகத் தின் இணையதளத்தில் (www.unom.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மே 31-ம் தேதிக்குள்… பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 31-ம் தேதி மாலை 4 மணிக்குள் பல்கலைக்கழகத்தில் இயங்கும் மாணவர் ஆலோசனை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 044-25399518 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு மாணவர் ஆலோசனை மைய இயக்குநர் (பொறுப்பு) எம்.சக்திவேல் கூறி யுள்ளார்.