மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு புகார் சி.பி.ஐ. அதிரடி சோதனை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு ஒன்றில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின்பேரில், டெல்லி சி.பி.ஐ. போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களில் தேர்வு எழுதியவர்கள், தரகர்கள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய ஊழியர்கள் இடம்பெற்று உள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் வழக்குக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ. போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.