9,402 பேர் 481-க்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம்

9,402 பேர் 481-க்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம்

9,402 பேர் 481-க்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம்

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவில் 9,402 பேர் 500-க்கு 481-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவில் மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் பெற்ற விவரத்தை வெளியிட்டது.

அதன்படி, அதிகபட்சமாக 9,402 பேர் 481-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். அடுத்ததாக 56,837 பேர் 451 – 480 இடைப்பட்ட மதிப்பெண்களையும், 64,144 பேர் 426 – 450 இடைப்பட்ட மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.

இதேபோல், 76,413 பேர் 401 – 425 இடைப்பட்ட மதிப்பெண்களையும், 3,66,084 பேர் 301 – 400 இடைப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றனர்.

3,12,587 பேர் 201 – 300 இடைப்பட்ட மதிப்பெண்களையும், 26,248 பேர் 176 – 200 இடைப்பட்ட மதிப்பெண்களையும் பெற்றனர்.

38,682 பேர் 175 மதிப்பெண்களுக்குகீழ் வாங்கியுள்ளனர். தலைவர்கள் வாழ்த்து எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித் துள்ளனர்.