ஆரவாரம் இல்லாமல் வெளியான தேர்வு முடிவுகள்

ஆரவாரம் இல்லாமல் வெளியான தேர்வு முடிவுகள்

ஆரவாரம் இல்லாமல் வெளியான தேர்வு முடிவுகள்

ரேங்க் பட்டியல் ஒழிப்பு காரணமாக, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை போல எந்தவிதமான ஆரவாரமும் இன்றி அமைதியான முறையில் நேற்று வெளியிடப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் பள்ளிகள் இடையே ஆரோக்கியமற்ற போட்டிச்சூழல் உருவாவதை தடுக்கும் நோக்கிலும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

ரேங்க் பட்டியல் முறை இருந்தபோது, பொதுத்தேர்வுகள் வெளியிடும் நாளன்று ரேங்க் பெறும் மாணவர்கள் படித்த பள்ளிகளில் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.

சாதனை மாணவர்களுக்கு இனிப்பூட்டி வாழ்த்து சொல்வது, ஊடகங்களுக்கு பேட்டி என பள்ளி வளாகம் அமர்க்களமாக காணப்படும்.

இந்த ஆரவாரங்களுக்கு எல்லாம் ரேங்க் முறை ஒழிப்பு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வும் எந்தவித ஆரவாரமின்றி அமைதியாக வெளியிடப்பட்டது.

அதேபோன்று எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவும் நேற்று அமைதியான முறையில் வெளியிடப்பட்டது.

ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டபடி, தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் செய்தியாளர்கள் தங்கள் அலுவலகங்களில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொண்டனர்.