தொலைதூரக்கல்வி

தொலைதூரக்கல்வி

 

தொலைதூரக்கல்வி

தொலைதூரக்கல்வி எம்பிஏ: ஜூன் 24-ல் நுழைவுத்தேர்வு இக்னோ பல்கலைக்கழக மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக்கல்வி திட்டத்தில் எம்பிஏ படிப்பை வழங்கி வருகிறது.

இதற்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மனிதவள மேலாண்மை, நிதி மேலாண்மை, விற்பனை மேலாண்மை, இயக்க மேலாண்மை ஆகிய பலதரப்பட்ட பாடங்களில் வழங்கப்படும் இந்த எம்பிஏ படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். 2 ஆண்டு கால இந்த படிப்பு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்றது.

இந்த ஆண்டு எம்பிஏ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பம் மற்றும் விளக்கவுரையை இக்னோ பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜுன் 1-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய இக்னோ பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தின் 044-26618039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.