காப்பீட்டு நிறுவனத்தில் பணி

காப்பீட்டு நிறுவனத்தில் பணி

காப்பீட்டு நிறுவனத்தில் பணி

காப்பீட்டு நிறுவனம் : ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ( ஜி.ஐ.சி.) என்பது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்.

தற்போது இந்த நிறுவனத்தில் ஸ்கேல் 1 தரத்திலான உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை இந்தி, ஆங்கிலம் படித்தவர்களுக்கும் பணியிடம் உள்ளது. விண்ணப்பதாரர்கள் 8-5-2018-ந் தேதியில் 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் 29-5-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இது பற்றிய விவரங்களை gicofindia.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். b