விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் பணி

விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் பணி

விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் பணி

மும்பையில், விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு 36 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற என்ஜினீயரிங் பட்டப்படிப்பு மற்றும் இதர அறிவியல் கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

10-ம் வகுப்பு படித்தவர் களுக்கு டிரைவர் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வெவ்வேறு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி 4-6-2018-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இது பற்றிய விவரங்களை http://dcsem.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.