ஐ.ஐ.டி. கல்வி மையத்தில், பதிவாளர், உதவி பதிவாளர், உதவியாளர் பணி

ஐ.ஐ.டி. கல்வி மையத்தில், பதிவாளர், உதவி பதிவாளர், உதவியாளர் பணி

ஐ.ஐ.டி. கல்வி மையத்தில், பதிவாளர், உதவி பதிவாளர், உதவியாளர் பணி

புவனேஸ்வரில் செயல்படும் ஐ.ஐ.டி. கல்வி மையத்தில், பதிவாளர், உதவி பதிவாளர், உதவியாளர், சூப்பிரண்டென்டிங் என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், டெக்னீசியன், டிரைவர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயது முதல் 57 வயதுடையவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது.

அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பி.இ., பி.டெக் படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், மூன்றாம் பாலினத்தவர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் 9-6-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இது பற்றிய விவரங்களை http://www.iitbbs.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.