தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி

தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி

தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி

தேசிய அனல்மின் நிறுவனம் (என்.டி.பி.சி.) தென் மண்டல கிளையில் இருந்து டிப்ளமோ என்ஜினீயர்களை டிரெயினி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக மெக்கானிக்கல் – 14 இடங்கள், எலக்ட்ரிக்கல் – 10, சி.அண்ட் ஐ – 6 இடங்கள் உள்ளன.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், புரொடக்சன் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 9-5-2018 தேதியில் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு மற்றும் கட்டணத்தில் விலக்கு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 4-6-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை http://www.ntpccareers.net/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.