டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உர நிறுவனத்தில் பணிகள்

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உர நிறுவனத்தில் பணிகள்

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உர நிறுவனத்தில் பணிகள்

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உர நிறுவனத்தில் பணிகள் தேசிய உர நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர் களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:- தேசிய உர நிறுவனம் சுருக்கமாக என்.எப்.எல் என அழைக்கப்படுகிறது.

இது மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் உரம் தயாரிப்பு மற்றும் விற்பனை மற்றும் அது சார்ந்த வேளாண் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறது.

தெலுங்கானா, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 இடங்களில் இதன் கிளைகள் செயல்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் செயல்படும் இதன் தலைமை நிறுவனத்தில் இருந்து தற்போது ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 129 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு மட்டும் 127 பேர் தேர்வு செய்யப் படுவது குறிப்பிடத்தக்கது. பதிண்டா, பானிபட், விஜய்பூர், நங்கல் போன்ற கிளைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்… வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர் களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், புரொடக்சன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் பி.எஸ்.சி. அறிவியல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தீயணைப்பு வீரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ.235 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் உடல்தகுதி, சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஓட்டப்பயிற்சி, எடை தூக்குதல், கயிற்றில் ஏறுதல், பார்வைத்திறன் சோதனை போன்றவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட உடல் தகுதி சோதிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசிநாள் 17-6-2018-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 7-7-2018 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் nflrecruitment@nfl.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.