கொங்கன் ரெயில்வேயில் வேலை

கொங்கன் ரெயில்வேயில் வேலை

கொங்கன் ரெயில்வேயில் வேலை

கொங்கன் ரெயில்வேயில் வேலை இந்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் கொங்கன் ரெயில்வே. மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா வரை இதன் ரெயில்வே சேவை நடக்கிறது.

இது மற்ற ரெயில்வே மண்டலங்களின் கீழ் வருவதில்லை. தற்போது இந்த கொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் டிராக்மேன், கலாசி உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிராக்மேன் பணிக்கு 50 பேரும், ஏ பிமேன் பணிக்கு 37 பேரும், கலாசி பணிக்கு 13 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 18 முதல் 31 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். சி.பி.டி. எனப்படும் கணினித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போது மானது. விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-6-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை http://konkanrailway.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.