அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் வேலை

அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் வேலை

அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் வேலை

அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் வேலை 477 காலியிடங்கள் அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 477 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய அணுசக்தி துறையின் கீழ் பல்வேறு அணுமின் நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது கல்பாக்கத்தில் செயல்படும் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், ஸ்டிபென்டரி டிரெயினி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 248 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதேபோல மும்பையில் இயங்கும் அணுசக்தி கனநீர் வாரிய நிறுவனத்தில் 229 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இதில் டெக்னீசியன், ஆராய்ச்சி அதிகாரி, நர்ஸ் போன்ற பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்… கல்பாக்கம் கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 248 பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 122 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 58 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 48 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 20 இடங்களும் உள்ளன.

அதிகபட்சமாக ஸ்டிபென்டரி டிரெயினி பணிக்கு மட்டும் 197 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஆர்கிடெக்சர், சிவில், சேப்டி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல், கெமிஸ்ட்ரி போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 17-6-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.igcar.gov.in என்ற இணையதள விண்ணப்பத்தை பார்க்கலாம்.

மும்பை கனநீர் வாரியம் மும்பை அணுசக்தி கனநீர் வாரிய நிறுவனத்தில் ஸ்டிபென்டரி டிரெயினி, டெக்னீசியன், சயின்டிபிக் ஆபீசர் போன்ற பணிக்கு 229 இடங்கள் உள்ளன.

கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிஸ்ட்ரி, பயோசயின்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஸ்டிபென்டரி டிரெயினி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்தவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும் கணிசமான பணியிடங்கள் உள்ளன.

இவர்கள் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்களாக இருக்க வேண்டும்.

என்ஜினீயரிங் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள், மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. உடல் பரிசோதனையும் நடத்தப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 25-6-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.hwb.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.