பி.எப். நிர்வாக கட்டணம் 0.5 சதவீதமாக குறைப்பு ரூ.900 கோடி மிச்சமாகும் என கணிப்பு

பி.எப். நிர்வாக கட்டணம் 0.5 சதவீதமாக குறைப்பு ரூ.900 கோடி மிச்சமாகும் என கணிப்பு

பி.எப். நிர்வாக கட்டணம் 0.5 சதவீதமாக குறைப்பு ரூ.900 கோடி மிச்சமாகும் என கணிப்பு
ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎப்) நிர்வாக கட்டணத்தை 0.65 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைக்க இபிஎப் மத்திய அறங்காவலர்கள் வாரியம் (சிபிடி) ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.900 கோடி மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் சார்பில் நிறுவனங்கள் செலுத்தும் பிஎப் தொகையில் 0.65 சதவீதம் வரை நிர்வாக கட்டணமாக பிஎப் அமைப்பு விதித்து வந்தது.

கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நடந்த அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் இதை 0.5 சதவீதமாகக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதாவது 0.15 சதவீதம் குறைக்கப்பட உள்ளது. வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ளது.

ரூ.900 கோடி மிச்சம் இதன்மூலம் நிறுவனங்களுக்கான செலவு குறையும். குறிப்பாக, நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.900 கோடி மீதமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதனால் பல ஊழியர்களை பிஎப் அமைப்புக்குள் கொண்டுவர நிறுவனங்கள் முயற்சி செய்யும் என பிஎப் ஆணையர் வி.பி. ஜாய் தெரிவித்துள்ளார்.

பிஎப் அமைப்பு கடந்த நிதி ஆண்டு நிறுவனங்களிடமிருந்து நிர்வாகக் கட்டணமாக ரூ.3,800 கோடி வசூல் செய்தது.

இந்த தொகையை வைத்துதான் பிஎப் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட நிர்வாகக் கட்டணத்தில் ரூ.20,000 கோடி உபரியாக உள்ளது.

இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,600 கோடி அளவுக்கு வட்டி வருமானம் கிடைக்கிறது. அதனால் நிர்வாகக் கட்டணத்தை குறைத்துள்ளோம், இதனால் பிஎப் தொகையை நிர்வகிப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று வி.பி. ஜாய் தெரிவித்தார்.

ஒரு நிறுவனம் பணியாளர்களுக்கு செலுத்தும் மொத்த சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே பிஎப் அமைப்பு நிர்வாகக் கட்டணத்தை குறைத்து வருகிறது. 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிர்வாகக் கட்டணம் 1.1 சதவீதத்தில் இருந்து 0.85 சதவீதமாக குறைக்கப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 0.85 சதவீதத்தில் இருந்து 0.65 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இப்போது 0.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கோடி சந்தாதாரர்களின் ரூ.10 லட்சம் கோடி தொகையை பிஎப் அமைப்பு நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.