பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

நாளை பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர்.

தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. விடைத்தாள் மதிப்பீட்டுப்பணியும் அதைத்தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டபடி, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 30 புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அவர்கள் அளித்திருந்த செல் போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாக அனுப்பப்படும்.

மேலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறையின் இணையதளங்களிலும் மதிப் பெண் விவரங்களுடன் அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn. nic.in எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 16-ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவின்போதும், 23-ம் தேதி வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவின்போதும் ரேங்க் பட்டி யல் வெளியிடப்படவில்லை.

அதேபோல, நாளை வெளியாக உள்ள பிளஸ் 1 தேர்வு முடிவிலும் ரேங்க் பட்டியல் வெளியிடப் படாது.

கடந்த 2017-ம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு பள்ளி அளவிலான சாதாரண வருடாந்திர தேர்வாகவே நடத்தப்பட்டது.

இந்த ஆண்டிலிருந்துதான் முதல்முறையாக பொதுத்தேர்வாக நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவு வெளியான பிறகு அனைவரும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

மாணவர்கள் ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

அனைத்து மாணவர்களுமே 12-ம் வகுப்பு சென்றுவிடலாம். தேர்ச்சிபெறாத பாடங்களை சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம்.

அடுத்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை முடிக்கும்போது இரு பொதுத்தேர்வுகளின் (பிளஸ் 1, பிளஸ் 2) மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல் (Consolidated Marksheet) வழங்கப்படும்.