சிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பில்

சிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பில் இ-பப்ளிஷிங், மல்டி மீடியா உள்ளிட்ட பாடங்கள் நீக்கம்!

சிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பில்

சிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பில் இ-பப்ளிஷிங், மல்டி மீடியா உள்ளிட்ட பாடங்கள் நீக்கம் | வரும் கல்வி ஆண்டு (2018 -19) முதல் சிபிஎஸ்இ 9,11-ம் வகுப்புகளில் இ-பப்ளிஷிங், மல்டி மீடியா மற்றும் வெப்-டெக்னாலஜி, மோகினியாட்டம் உட்பட குறிப்பிட்ட சில தெரிவு பாடங்கள் நீக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ பள்ளி களுக்கு அதன் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
வரும் கல்வி ஆண்டு (2018-2019) முதல் 9-ம் வகுப்பில் இங்கிலீஷ் கம்யூனிகேட்டிவ், இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, இ-பப்ளிஷிங் மற்றும் இ-ஆபீஸ் ஆகிய தெரிவு பாடங்கள் (Elective Subjects) நீக்கப்படுகின்றன.

அதேபோல், 11-ம் வகுப்பில், மோகினியாட்டம், மல்டி மீடியா மற்றும் வெப் டெக்னாலஜி, இங்கிலீஷ் எலெக்டிவ் ஆகிய தெரிவு பாடங்கள் நீக்கப்படும். எனவே, மேற்கண்ட தெரிவு பாடங்களை வழங்கிவரும் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டு முதல் அப்பாடங்களை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகின்றன.

ஏற்கெனவே, மேற்கண்ட தெரிவு பாடங்களைத் தேர்வு செய்த 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் தங்களின் அடுத்த வகுப்பில் (10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு) அவற்றை தொடர்ந்து படிப்பார்கள்.

மேலும், 11-ம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவில் தற்போது இடம்பெற்றிருக்கும் வேளாண்மை, ஃபேஷன் படிப்பு, மாஸ் மீடியா படிப்பு ஆகியவை வரும் கல்வி ஆண்டில், அந்த படிப்புகள் தொடர்பான இதர படிப்புகளுடன் இணைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.