அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர் பணி வரைமுறை செய்யப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர் பணி வரைமுறை செய்யப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் பணி வரைமுறை செய்யப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.

சுற்றுச்சுவர் தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.

அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்து பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:- தமிழகத்தில் தற்போது 98 அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் பகுதி சுற்றுச்சுவர் உள்ள 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 586 காவலர்கள், பெருக்குபவர்கள் மற்றும் துப்புரவாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படும். ஊக்கத் தொகை உயர்வு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் இக்கல்லூரிகளில் இளங்கலை மற்றும் இளமறிவியல் பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ.400, 2018-19-ம் கல்வியாண்டு முதல் ரூ.900 என உயர்த்தி வழங்கப்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 334 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் பணி வரைமுறை செய்யப்படும்.

முதுநிலை பட்டப்படிப்பு கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நிலையத்திற்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில் எம்.இ. கம்யூனிகேசன் சிஸ்டம் என்ற முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும்.

பல்கலைக்கழகங்களுக்கு ரூ.25 கோடி ஆராய்ச்சி நிதி வழங்கப்படும். கிராமப்புற புதுமை விருது 1990-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, சங்கரன்கோவில், பணகுடி ஆகிய இடங்களில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூன்று மனோ கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

ஒவ்வொரு கல்லூரிக்கும் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும்.

அறிவியல் நகரத்தின் மூலமாக கிராமப்புற கண்டுப்பிடிப்பாளர்களுக்கு கிராமப்புற புதுமை விருது வழங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் குறுங்கோளரங்கம், முப்பரிமாண காட்சிக்கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாவட்ட அறிவியல் மையம் அமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த கற்றல் தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் மூலமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில மற்றும் வேலை வாய்ப்பு திறனுக்கான ஒருங்கிணைந்த கற்றல், பிரிட்டிஷ் கவுன்சில் உடன் இணைந்து அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.