பி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம்

பி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் அமைக்க வேண்டும் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி !

பி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம்

பி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் அமைக்க வேண்டும் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி | பி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் அமைக்க வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 731 பி.எட். கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 7 அரசு கல்லூரிகள் ஆகும்.
14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும், 710 சுயநிதி பி.எட். கல்லூரிகளும் உள்ளன.

இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மாணவர் களை பெற்றோர் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள்.

எனவே ஒவ்வொரு கல்லூரிகளிலும் வேலைவாய்ப்பு மையம் (பிளேஸ்மென்ட் செல்) அமைக்க வேண்டும். இதற்காக பி.எட். கல்லூரி தங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளை தொடர்புகொண்டு அந்த பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த மையத்திற்கு பேராசிரியர் ஒருவர் பொறுப்பு வகிக்க வேண்டும். பின்னர் இதுகுறித்து பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பி.எட். கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதலாம். எனவே இதுகுறித்து மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுகிறார்களோ? அந்த கல்லூரிக்கு பல்கலைக்கழகம் சார்பில் பரிசு வழங்கப்படும். பி.எட். கல்லூரிகளில் பசுமைத்திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் சீர்மரபினர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பேராசிரியர்களும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர். கல்வியியல் கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அவர்களுக்கு கோடை விடுமுறை காலத்திலும் ஊதியம் வழங்க வேண்டும். அவ்வாறு ஊதியம் வழங்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி தெரிவித்தார்.