கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.

மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போகும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி பள்ளி கள் நேற்று திறக்கப்பட்டன.

முதல் நாள் என்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் முன்கூட்டியே பள்ளிக்கு வந்தனர்.

9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு சீருடை மாற்றப்பட்டதால், அவர்கள் அனைவரும் புதிய சீருடையில் வந்தனர்.

பரஸ்பரம் நலம் விசாரிப்பு நீண்ட நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்ததால் மாணவ, மாணவிகள் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர்.

விடுமுறை நாள் அனுபவங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

இலவச புத்தகம், சீருடை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவச சீருடைகள் வழங் கப்பட்டன.

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று சென்ற பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அங்கு முதல் நாள் வகுப்புகளை ஆய்வு செய்தார்.