பிளஸ் 1 விடைத்தாள் நகல் பெற 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 1 விடைத்தாள் நகல் பெற 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 1 விடைத்தாள் நகல் பெற 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 1 மாணவர்கள் விடைத் தாள் நகல் பெற ஜுன் 4-ம் தேதிக்குள் (திங்கள்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள் ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் ஜுன் 2, 4 ஆகிய தேதிகளில் (சனி, திங்கள்) விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே பின்னர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் தற்போது அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

விடைத்தாள் நகல் பெற்ற பிறகே மறுகூட்டலுக்கோ அல்லது மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாளுக்கான கட்டணம் மொழித்தாள் – ரூ.550, ஆங்கிலம் – ரூ.550, மற்ற பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) – ரூ.275. மொழித்தாள், ஆங்கிலம், உயிரியல் பாடங்களுக்கு தலா – ரூ.305 (இரு தாள்கள் சேர்த்து), மற்ற பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) – ரூ.205. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அந்த ஒப்புகைச்சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண் ணைப் பயன்படுத்தியே பின்னர் விடைத்தாள் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்துகொள்ள இயலும்.

விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும்.