முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

குரூப்-1 தேர்வு வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்வு சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் குரூப்-1 தேர்வு வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்வு சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரி வித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு உள்ளதுபோல டிஎன்பிஎஸ்சி நடத் தும் குரூப்-1, 1-ஏ, 1-பி பணியிடங்களுக்கான தேர்வு வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும்.

அதன் படி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகிய பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35-ல் இருந்து 37 ஆக வும் இதர பிரிவினருக்கு 30-ல் இருந்து 32 ஆகவும் உயர்த்தப்படு கிறது.

தமிழகத்தில் 2,448 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்  ரூ.48 கோடியே 96 லட்சம் செலவில் சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொள்ள ரூ.42 கோடியே 92 லட்சத் தில் 2,283 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.

புதிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி, தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பை மேம்படுத்தும் பயிற்சியும் ஆய்வு அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி யும் வழங்கப்படும்.

இதற்காக ரூ.35 கோடியே 14 லட்சம் செலவிடப்படும். மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 32 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும்.

இதற்காக ஒரு பள்ளிக்கு ரூ.50 லட்சம் வீதம் ரூ.16 கோடி செலவிடப்படும்.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.11 கோடியே 25 லட்சத்தில் ஆதார் எண் இணைக்கப்பட்டு திறன் அட்டை வழங்கப்படும்.

41 அரசு கல்லூரிகள் தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கலை, அறிவியல் கல்லூரிகள், நடப்பு கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும்.

இதற்கென ஆண்டுக்கு ரூ.152 கோடியே 20 லட் சம் செலவிடப்படும். 2018-19 கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 68 இளங்கலை, 60 முதுகலை, 136 ஆராய்ச்சி என 264 புதிய பாடப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

இதற்காக 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.68 கோடியே 46 லட்சம் தொடரும் செலவினம் ஏற்படும்.

இப்பாடப் பிரிவுகளின் தேவைக்காக ரூ.62 கோடியே 75 லட்சத்தில் 324 வகுப்பறைகள், 50 ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பர்கூர், கோவை, காரைக்குடி, சேலம், நெல்லை, வேலூரில் உள்ள 6 அரசுப் பொறியியல் கல்லூரி விடுதிகளில் தலா 3 நபர்கள் தங்கும் வசதி கள் கொண்ட 50 அறைகள் கொண்ட விடுதிகள் ரூ.37 கோடியில் அமைக்கப்படும்.

கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுரஅடி பரப்பில் ரூ.100 கோடியி லும் திருச்சியில் 1 லட்சம் சதுர அடி யில் ரூ.40 கோடியிலும் 2 தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்படும்.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மின் ஆளுமை சேவைகளை கண்காணித்து தடங்கலற்ற, பாதுகாப்பான இணைய சேவையை வழங்க ரூ.21 கோடியே 39 லட்சத்தில் ‘தமிழகத்துக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்’ செயல்படுத்தப்படும்.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கிவரும் டிஜிட் டல் கேபிள் டிவி சேவை மேம்படுத்தப்பட்டு, எச்டி செட்டப் பாக்ஸ் மூலம் வழங்கப்படும்.

காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத் துறையினருக்கு பயிற்சி அளிக்கவும் அதற்கான உபகரணங்கள் வாங்கவும் ரூ.2 கோடி செலவிடப்படும். சென்னை வேளச்சேரியில் வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் 70 ஆயிரம் சதுரஅடியில் வனத் துறை தலைமை அலுவலகம் ரூ.30 கோடியில் கட்டப்படும்.

வனச் சரகங்களுக்கு ரூ.12 கோடியே 50 லட்சத் தில் 125 ஜீப்புகள் வாங்கப்படும். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக புற எல்லைப் பகுதியில் அருங்காட்சியகம், பழங்குடியினர் சூழல் கலாச்சார கிராமம் ரூ.7 கோடியில் உருவாக்கப்படும்.

பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.