பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர்

பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8-ல் தொடக்கம்

பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர்

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் கலந்தாய்வு மூலம் சேர 1 லட்சத்து 52 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8-ம் தேதி தொடங்குகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 7,969 பேர் விண்ணப்பித்தனர். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 1 லட்சத்து 52 ஆயிரத்து 940 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதால் இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 42 மாண வர் சேர்க்கை உதவி மையங்களில் நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு விவரம் குறித்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் ரைமண்ட் உத்தரியராஜ் கூறி னார்.

அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்தபடி, ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும்.