எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் வேலைவாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் வேலைவாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் வேலைவாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 787 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

அகில இந்திய அறிவியல் மருத்துவ மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகிறது.

தற்போது சில எஸ்ம்ஸ் கிளைகளில் சீனியர் ரெசிடென்ட், டியூட்டர், சீனியர் நர்சிங் ஆபீசர், சயின்டிஸ்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 787 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கிளை வாரியாக உள்ள பணியிட விவரம் மற்றும் தகுதி விவரங்களை இனி பார்ப்போம்…

பாட்னாவில் 228 இடங்கள்

பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் கிளையில் சீனியர் ரெசிடென்ட் பணிக்கு 228 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 118 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 54 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 38 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 18 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எம்.டி., எம்.எஸ்., டி.என்.பி., டி.எம், எம்.சிஎச்., முதுநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1200-ம், மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றியும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 10-6-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடையும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

புதுடெல்லி 192 இடங்கள்

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் கிளையில் ஜூனியர் ரெசிடென்ட் பணிக்கு 192 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு 5-6-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

புவனேஸ்வரில் 150 இடங்கள்

புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் சீனியர் ரெசிடென்ட் பணிக்கு 148 இடங்களும், கூடுதல் பொது மேலாளர் பணிக்கு 2 இடங்களும் உள்ளன.

எம்.டி., எம்.எஸ்., டி.எம்., டி.என்.பி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

11-6-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

ஜோத்பூரில் 127 இடங்கள்

ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் சீனியர் நர்சிங் ஆபீசர் பணிக்கு 127 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 27-6-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆராய்ச்சியாளர் பணிகள்

புதுடெல்லி எய்ம்ஸ் கிளையில் மற்றொரு அறிவிப்பின்படி ஆராய்ச்சியாளர், பிளட் டிரான்சிபியூசன் ஆபீசர், டியூட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மொத்தம் 90 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 18-6-2018-ந் தேதியாகும். விருப்பமுள்ளவர்கள் இவை பற்றிய விவரங்களை அந்தந்த எய்ம்ஸ் கிளையின் இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

எய்ம்ஸ் இணையதள முகவரி https://www.aiims.edu/