உதவி தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 805 காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

உதவி தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 805 காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

உதவி தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 805 காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு, உதவி தோட்டக்கலை அதிகாரி பணியிடங்களுக்கு 805 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏற்படும் காலியிடங்களை இந்த அமைப்பு தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது.

தற்போது வேளாண்மைத் துறையில் ஏற்பட்டுள்ள உதவி தோட்டக்கலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மொத்தம் 805 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பின்னடைவு பணியிடங்களாக 48 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர 2016-2017 ஆண்டில் ஏற்பட்ட 757 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்… வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 1-7 2018-ந் தேதியில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., டி.சி. மற்றும் பி.சி. பிரிவினர் பி.சி.எம். பிரிவினர் மற்றும் விதவைப் பெண்கள் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் மேல்நிலைக் கல்வியுடன், தோட்டக்கலை பற்றிய 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும்.

கட்டணம் : பொது மற்றும் பி.சி., எம்.பி.சி. பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், விதவைப் பெண்கள் தேர்வு கட்டணம் (ரூ.100) செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யும் முறை : எழுத்துத் தேர்வு, உடல்தகுதி பரிசோதனை, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.

தாள் 1 மற்றும் தாள் 2 எழுத்துத் தேர்வு 11-8-2018-ந் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 24-6-2018-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpsc exams.in ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.