அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62

அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து யு.ஜி.சி. ஒப்புதல்

அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62

அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து யு.ஜி.சி. ஒப்புதல் | யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானிய குழு) ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள 5 மத்திய பல்கலைக்கழகங்கள், 21 மாநில பல்கலைக்கழகங்கள், 26 தனியார் பல்கலைக்கழங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க யு.ஜி.சி. ஒப்புதல் வழங்கியது.

இது தவிர 10 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்பட 5 மத்திய பல்கலைக்கழகங்களும், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 21 மாநில பல்கலைக்கழகங்களும், ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 26 தனியார் பல்கலைக்கழகங்களும் இதில் அடங்கும். யு.ஜி.சி.யின் இந்த முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பாராட்டினார். இதன் மூலம் நாட்டின் கல்வித்தரம் மேலும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.