எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து | எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு கணிதத்தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், கணிதத்தேர்வு எளிதாகவும் இல்லை, கடினமாகவும் இல்லை என தெரிவித்தனர். எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வும் நேற்று நடைபெற்றது.

ஏற்கனவே தமிழ் முதல் தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் 2-ம் தாள் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு குறித்து கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:- தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது.

முதல் தாளை ஒப்பிட்டு பார்க்கையில் 2-வது தாள் மிக எளிதாக இருந்தது. படித்த கேள்விகள் தான் வந்திருந்தன. பல கேள்விகள் திருப்புதல் தேர்வுகளில் இருந்து கேட்கப்பட்டன.

அதனால் அனைத்து கேள்விகளும் நாங்கள் எதிர்பார்த்தது தான். பாடத்தின் உள்ளே இருந்து 2 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவையும் எளிதாக தான் இருந்தன.

இவ்வாறு அவர்கள் கூறினர். எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வில் காப்பி அடித்ததாக விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேரும், திருச்சி மாவட்டத்தில் 2 பேரும், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் பிடிபட்டனர். மொத்தத்தில் 24 பேர் பிடிபட்டனர்.