2009 ற்கு முன் எம்.பில்

2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு

2009 ற்கு முன் எம்.பில்

2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது.

ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் 25 SET/NET முடித்தவர்களையும், 18 M.Phil/Ph.D முடித்தவர்களையும் தேர்வு செய்தது. ஆனால், 2009 ல் யூ.ஜி.ஸி SET/NET ஐ குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்து, அறிவிக்கை வெளியிட்டது. முன்னதாக நீதி மன்றம், ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட 43 உதவி பேராசிரியர்களில் (25 நபர்கள் SET/NETமுடித்தவர்கள், 18 நபர்கள் M.Phil/Ph.D முடித்தவர்கள்) 18 நபர்கள் SET/NET முடிக்காத, M.Phil/Ph.D முடித்தவர்களின் தேர்வு செல்லாது என்று உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, 25 நபர்களின் தேர்வை மட்டும் நீதி மன்றம் அங்கீகா¢த்தது. இந்த வழக்கின் மேல் முறையீட்டில், யூ.ஜி.ஸி July 2016 ல் அன்று, உதவி பேராசி¡¢யர் குறைந்தபட்ச தகுதியில் மாற்றம் செய்து, யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) வெளியி¢ட்டது. அதில் 2009 ல் கொண்டு வரப்பட்ட விதியானது, அதாவது, July11, 2009 அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விதியானது, July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களுக்கு பொருந்தாது என்றும் July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள SET/NET தேர்வுகளிலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக்காட்டி, இந்த யூ.ஜி.ஸி வரைவு 2016 (4வது மாற்றம்) புதிய விதியின் படி, மீண்டும் அந்த 18 நபர்களின் தேர்வையும் நீதி மன்றம் உறுதி செய்ததுடன், தேர்ச்சிப் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.

எனவே, இனி, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லுரிகளில் இந்த July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களை உதவி பேராசி¡¢யர் பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்க வேண்டும்.

இதேபோல், யூ.ஜி.ஸி & உயர் நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ள இந்த நிலையில், டி.ஆர்.பி மூலம் அரசு கலை & அறிவியல் கல்லூ¡¢களில் நிரப்படவிருக்கும் காலி உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில், இந்த விதி, July 11, 2009 ற்கு முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களையும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்க வேண்டும்.

எனவே, July 11, 2009 ற்கு முன் M.Phil முடித்தவர்களுக்கு 5 மதிப்பெண்ணையும், Ph.D முடித்தவர்களுக்கு, தற்போது வழங்கப்படும் 9 மதிப்பெண்ணையும், டி.ஆர்.பி நிர்ணயிக்க வேண்டும், என்கிறார்கள்