அனைவருக்கும் கல்வி இயக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அனைவருக்கும் கல்வி இயக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், சென்னை மாவட்டம், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர் என்ற முகவரிக்கு வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.