வேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்

வேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது

வேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்

வேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது | அரசு பள்ளிகளில் தற்காலிகமாக வேலைபார்க்கும் பள்ளி ஆசிரியர்களிடம் பணி நிரந்தரம் செய்வதாக கூறி ரூ.66 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

பாலகுமார்-கலையரசி சென்னை திருமுடிவாக்கத்தை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 47). இவரது மனைவி கலையரசி (35). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ள இவர்கள், வீடுகளில் உள் அலங்காரம் செய்யும் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவர் மீதும் விழுப்புரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற ஆசிரியர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- ரூ.66 லட்சம் மோசடி நான் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். என்னை போல தமிழகம் முழுவதும் ஏராளமானோர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.

பாலகுமாரும், அவரது மனைவி கலையரசியும் தங்களுக்கு கல்வித்துறை உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், தற்காலிக ஆசிரியர் வேலையை நிரந்தரமாக்கி தருவதாகவும் கூறினார்கள்.

அதை உண்மை என்று நம்பி நானும், தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் 75 ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து ரூ.66 லட்சம் பணம் வசூலித்து, பாலகுமாரிடம் கொடுத்தோம். அவர் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணையை பெற்றுத்தரவில்லை.

ரூ.66 லட்சத்தையும் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.