வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ.

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ.

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி | வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. தேர்வு கடந்த 5-ந் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வும், 12-வது வகுப்பு தேர்வும் தொடங்கின. 10-வது வகுப்பு தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 10-ம் வகுப்பு தேர்வுகள், நேற்றுடன் முடிவடைந்தன. 12-வது வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். வினாத்தாள் வெளியானது கடந்த 26-ந் தேதி, 12-வது வகுப்புக்கு பொருளாதார தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, வினாத்தாள் வெளியானதாக வாட்ஸ்-அப்பில் செய்தி பரவியது. ஆனால், அதை சி.பி.எஸ்.இ. மறுத்தது. தாங்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் சரிபார்த்து விட்டதாகவும், வினாத்தாள் வெளியாகவில்லை என்றும் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று 10-ம் வகுப்பு இறுதி தேர்வாக கணித தேர்வு நடந்தது. வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.

ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த தேர்வின் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக செய்தி பரவியது. மறுதேர்வு இதை சி.பி.எஸ்.இ.யும் உறுதி செய்துள்ளது.

மேற்கண்ட 2 தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப் படும் என்றும் அறிவித்தது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுபாட்டு அதிகாரி கூறியிருப்பதாவது:- சில குறிப்பிட்ட தேர்வுகளில் நடந்த நிகழ்வுகளை சி.பி.எஸ்.இ. கவனத்தில் கொண்டுள்ளது.

எனவே, சி.பி.எஸ்.இ. தேர்வுகளின் புனிதத்தன்மையை கட்டிக் காக்கவும், மாணவர்களுக்கு நியாயம் வழங்கவும் 10-வது வகுப்பு கணிதம், 12-வது வகுப்பு பொருளாதாரம் ஆகிய தேர்வுகளை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வுகள் நடைபெறும் தேதியும், இதர விவரங்களும் இன்னும் ஒரு வாரத்தில் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.நீதீமீ.ஸீவீநீ.வீஸீ) அறிவிக்கப்படும். இவ்வாறு சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார்.

அதிர்ச்சி அதே சமயத்தில், 2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களால், இதை ஜீரணிக்க முடியவில்லை.

சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:- நாங்கள் கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதினோம். யாரோ செய்த தவறுக்காக, மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? வினாத்தாளை வெளியிட்டவர்களை கடுமையாக தண்டிக்கட்டும். ஆனால், செய்யாத தவறுக் காக மாணவர்களும் தண்டிக்கப்படுவது, துரதிருஷ்ட வசமானது. 10-ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்தது.

பெரும்பாலானோர் நன்றாக எழுதினோம். இனிமேல், மறுதேர்வு வினாத்தாள் எப்படி இருக்குமோ தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சில மாணவர்கள், கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்வதற்காக, ரெயில் டிக்கெட் பதிவு செய்து வைத்திருந்தனர். மறுதேர்வு அறிவிப்பால், அவர்கள் ஊருக்கு செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வினாத்தாள் வெளியானதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- மாணவர்களும், பெற்றோரும் தேர்வுக்கு எப்படி கஷ்டப்பட்டு தயாராகி இருப்பார்கள் என்று எனக்கு தெரியும்.

எனவே, வினாத்தாள் வெளியானது கவலை அளிக்கிறது. டெல்லியில் ஒரு கும்பல், ஏதோ திட்டத்துடன், வேண்டுமென்றே இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பான டெல்லி போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அக்கும்பல் பிடிபட்டு, சட்டப்படி தண்டிக்கப்படும். எனது அமைச்சகமும் உள்மட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளது. திங்கட்கிழமையில் இருந்து, உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய நடைமுறை புகுத்தப்பட உள்ளது. எனவே, இனிமேல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகாது.

இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் மோடி பேசியது பற்றி கேட்டதற்கு, “மோடிக்கு எல்லா தகவல்களையும் கொடுத்துள்ளேன். மன உளைச்சல் இல்லாத தேர்வுமுறை பற்றி மோடி எப்போதுமே விவாதிப்பார். அவருக்கு இது முக்கியமான பிரச்சினை” என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.