பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறை

பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு

பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறை

பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு | பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன்மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இம்மாதம் 31-ம் தேதியுடன் பான்கார்டு, ஆதார் எண் இணைப்புக்கு இறுதிக் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன்காலக்கெடு நீட்டிப்பு என்பது 4-வது முறையாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் வருமானவரி செலுத்துவோர் அனைவரும் வரிமானவரி ரிட்டன் தாக்கலின் போது, பான்கார்டுடன், ஆதார் எண்ணையும்இணைத்து தாக்கல்செய்வது கட்டாயம் என்று அறிவித்தார்.

இது கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் 4 கட்டங்களாக ஆதார் எண், பான்கார்டு இணைப்பு காலக்கெடு நீட்டக்கப்பட்டது. இந்நிலையில், இறுதியாக இம்மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் வருமானவரி செலுத்துபவர்கள், பான்கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாரோடு இணைக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே இம்மாதம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணோடு இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தீர்ப்பு வரும் வரை காலக்கெடுநீட்டிப்பு தொடரும் என்று அறிவித்தது.

இதனால், வேறு வழியின்றி, மத்திய அரசும், பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கும் முடிவுக்கு வந்துள்ளது.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், வருமானவரி செலுத்துபவர்கள் பான் கார்டுடன்ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் வருமானவரி ரிட்டனில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக 65 கோடி பான்கார்டுகள் இருக்கும் நிலையில்,அதில் 33 கோடி பான்கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.