இந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பம்

​இந்திய ரயில்வே மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையாக உள்ளது. தற்போது ரயில்வேயில் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்ஜின் டிரைவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தச்சர்கள், ரயில்பாதை கண்காணிப்பு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான பணிகளுக்காக ஏறத்தாழ 90 ஆயிரம் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்களை ரயில்வே தேர்வு செய்ய உள்ளது.

இந்த 90 ஆயிரம் இடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மாதம் விளம்பரம் செய்தது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 31-ம் தேதி (இன்று) கடைசி நாள். இந்நிலையில் ரயில்வே அதிகாரிகள் எதிர்பார்க்காத வகையில் இதுவரை இரண்டரை கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் அஷ்வனி லோஹானி கூறுகையில், ”கடந்த 2 ஆண்டுகளாக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. பணியில் இருந்து ஏராளமானோர் ஓய்வு பெற்ற நிலையில், புதியவர்களை தேர்வு செய்ய முடிவு செய்தோம். 90 ஆயிரம் பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் தகுதியானவர்களை தேர்வு செய்வது சவாலான பணிதான். என்றாலும் திறமையானவர்களை தேர்வு செய்வோம்” என்றார். இரண்டரை கோடி பேர் என்பது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையைவிட அதிகம். 90 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.