விடைத்தாள் திருத்தும்

விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு

விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு | தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன் நிருபர்களிடம் கூறியதாவது:- 2009-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 7-வது ஊதியக்குழுவில் எந்த வித நடைமுறையும் பின்பற்றாததால் ஒரே பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை விட முதுநிலை பட்டதாரிகள் மொத்த ஊதியம் ரூ.200 குறைவாக இருந்தது. 8-வது ஊதியக்குழு அமல்படுத்திய பின் பட்டதாரி ஆசிரியர்களை விட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.3 ஆயிரம் குறைவாக பெறுகிறார்கள். இந்நிலையை போக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு கொடுப்பது போல அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரத்து 150 வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் 12-ந் தேதி முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடைத்தாள் திருத்தும்