12-ம் வகுப்பு பாடம் இலவசம் பிஎஸ்என்எல் அறிவிப்பு

12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு

12-ம் வகுப்பு பாடம் இலவசம் பிஎஸ்என்எல் அறிவிப்பு

12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,199-க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர் களுக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

இந்த இணைப் பில் அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.1,199-க்கு குடும்ப பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேருபவர்களுக்கு மாதந்தோறும் அளவில்லா டேட்டாக்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், 30 ஜி.பி. வரை 10 எம்பிபிஎஸ் வேகத்திலும், 30 ஜிபிக்கு மேல் 2 எம்பிபிஎஸ் வேகத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.அத்துடன், இந்த இணைப்பு டன் வழங்கப்படும் தரைவழி தொலைபேசி இணைப்புக்கு மாதாந்திர கட்டணம் கிடையாது. அதைத் தவிர, இந்த பிராட்பேண்ட் இணைப்பு பெறுபவர் களுக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் வழங்கப் படும்.லோக்கல் மற்றும் எஸ்டிடிஇந்த மொபைல் சிம் இணைப்புகளில் அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் (லோக்கல் மற்றும்எஸ்டிடி) அழைப்புகளை மேற்கொள்ளலாம். அளவில்லா டேட்டாக்களையும் பதிவிறக்கம் செய் யலாம். 12-ம் வகுப்பு பாடம் இலவசம் இதைத் தவிர, இந்த 3 சிம் இணைப்புகளி்ல் ஒரு சிம் இணைப்பில் ஆன்லைன் டிவியை இலவசமாக பார்க்கலாம்.

அத்துடன், 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு பாடத்தை ஆன்லைன் மூலம் ஒரு மாதம் வரை இலவசமாக கற்கலாம். இந்த பிராட்பேண்ட் இணைப்பை ரத்து செய்ய விரும்பினால், 3 மொபைல் ப்ரீபெய்டு சிம் இணைப்புகளும் ரத்துசெய்யப்படும்.பிராட்பேண்ட் இணைப்பு களுக்கான மாதாந்திர கட்டணத்தை ஒரு வருடம், 2 வருடம் அல்லது 3 வருடம் என சேர்த்தும் செலுத்தலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.