பிஎட், எம்எட் அரியர் தேர்வுக்கு

பிஎட், எம்எட் அரியர் தேர்வுக்கு ஏப்.11 வரை விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அறிவிப்பு

பிஎட், எம்எட் அரியர் தேர்வுக்கு

பிஎட், எம்எட் அரியர் தேர்வுக்கு ஏப்.11 வரை விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அறிவிப்பு –

பிஎட், எம்எட் அரியர் தேர்வு களுக்கு ஏப்ரல் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள் ளது.

கடந்த 2014-2015 மற்றும் 2015-2016-ம் கல்வி ஆண்டில் பிஎட், எம்எட் (சிறப்பு கல்வியியல் படிப்புகள் உட்பட) படிப்புகளில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான தேர்வுகள் மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளன.

இத்தேர்வுக்கு ஏப்ரல் 11-ம் தேதி வரையும், அபராதக் கட்டணம் செலுத்தி ஏப்ரல் 20-ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் என். ரவீந்திரநாத் அறிவித்துள்ளார்.

மேலும், 2-ம் ஆண்டு பிஎட், எம்எட் மற்றும் சிறப்பு கல்வியியல் பிஎட் எம்எட் படிப்புகளுக்கான தேர்வுகள் மே மாதம் நடைபெற உள்ளன.

இத்தேர்வு களுக்கான தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2-ம் ஆண்டு பிஎட், எம்எட் மாணவர்கள் ஏப்ரல் 9-ம் தேதி வரை தேர்வுக்கட்டணம் செலுத்திக்கொள்ளலாம்.

அபராதக் கட்டணத்துடன் ஏப்ரல் 16 வரை தேர்வுக்கட்டணம் செலுத்த காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.